Monday, 28 April 2014

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

கண்ணுக்கு

தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?
தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும்,செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.
தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு,கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன.

தேவையற்ற முடி உதிர

தலைவலி குறைய

இன்றைய உலகில் நம்மில் நிறைய நபர்களுக்கு தலைவலி பிரச்னை இருக்கிறது . சிலர் மருத்தவரின் ஆலோசனை பெறாமலே
மருந்து உட்கொள்கிறார்கள் .அது மிக ஆபத்தான விசையம் அந்த தவறை நீங்கள் செய்யாதிர்கள் .தலைவலி என்று கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிட கூடாது .அது உங்களுக்கு பெரிய ஆபத்தில் முடிந்துவிடும் அதற்க்கு நீங்கள் கீழே உள்ள மருத்துவ குறிப்புகளை பயன் படுதாலம் அது எந்த வித பக்கவிளைவும் இல்லாதது .

1.முட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.2.200 மில்லி பசலைக்கீரை சாறு மற்றும் 300 மில்லி கேரட் சாறு இந்த கலவைகளை தினமும் குடித்து வ‌ந்தால் ஒற்றைத் த‌லைவ‌லி குறையும்.
3.வெள்ளை எள்ளை எடுத்து அதை எருமைப் பால் விட்டு நன்கு அரைத்து சூரிய உதயத்திற்கு முன் தலையில் பற்றுப் போட்டு பின் சூரிய ஒளியில் காட்டினால் ஒற்றைத் தலைவலி குறையும்.
மிளகாயை நீரிலிட்டு நன்கு காய்ச்சி இறக்கி அதில் நல்லெண்ணெய் சேர்த்து கலக்கி , மிளகை பசும்பால் சேர்த்து நன்கு அரைத்து,அந்த விழுதையும் அதனுடன் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி அதை காலையில் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
4.எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
5.பொன்னாங்கண்ணி சாறு, சிறு கீரை சாறு, ஆவாரைகொழுந்து சாறு, பசுவின் நெய் ஆகியவற்றை ஒரு டம்ளர் எடுத்து கிராம்பு, மரமஞ்சள், ஏலரிசி, வால்மிளகு, கோஷ்டம் மிளகு, செண்பகப்பூ, அதிமதுரம், தேவதாரம், ஜாதிக்காய், வெட்டிவேர், சந்தனம், அரத்தை இவைகளை எல்லாம் சிறிதளவு எடுத்து தட்டி போட்டு, சிற்றாமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை சமஅளவு விட்டு சிவக்க காய்ச்சி தலைக்கு தேய்த்துக் குளித்து வர ஒற்றைத் தலைவலி குறையும்.
6.அதிமதுரம், சோம்பு இவற்றை பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட ஒற்றை தலைவலி குறையும்.
7.சிறு கீரை வேர், மிளகு, மஞ்சள் மூன்றையும் நல்லெண்ணெயில் காய்ச்சி குளித்து வ‌ர‌ குறையும்.
8.இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.
8.மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்.
9.செம்பருத்தி பூக்களை நல்லெண்ணெயை விட்டு காய்ச்சி வாரம் ஒருமுறை தேய்த்துக் குளியுங்கள். ஒற்றைத் தலைவலி பறந்து போகும்.
10எலுமிச்சையுடன் இஞ்சி சேர்த்து சாறெடுத்து குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.
11.நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

தலை முடி வளர..!

தலை முடி வளர..!
அறிகுறிகள்:
முடி உதிர்தல்.
தேவையான பொருட்கள்:
சோற்றுக்கற்றாழை.
படிகாரம்
நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.

"மரு" (Skin Tag) உதிர...

"மரு" (Skin Tag) உதிர...
Natural Skin Tag Remover....
இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும்.
இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம்.
அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...
அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும்.
இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.
முடிந்தவரை பகிருங்கள்....பகிருங்கள்....பகிருங்கள்...

Monday, 21 April 2014

பிரபஞ்ச சக்தி

பிரபஞ்ச சக்தி உங்களிடம் எவ்வளவு இருக்கின்றது?ஒரு சின்ன டெஸ்ட் ……
முதலில் இந்த பிரபஞ்ச சக்தி எங்கிருந்து வருகின்றது என பார்ப்போம்…

இந்த சக்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கின்றது. இது இயற்கையாகவே எல்லா உயிரினத்திலும் உள்ளது. நாம் நம்முடைய செயற்கையான வாழ்கைமுறையின் மூலம் நம்முடைய சக்தியை பெருமளவு இழந்துவிட்டோம்.மீதம் இருப்பது நம்மையும் அறியாமல் நாம் செய்யும் சுவாசத்தின் மூலமும் அவ்வப்போது நாம் செய்யும் தியானம் மற்றும் இறைவழிபாடு மூலமும் தான்.

இந்த பிரபஞ்ச சக்தியை பெற வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டுவது தியானம் அல்லது இறைவழிபாடு போன்றவைதான்.

இதில் தியானம் என்பது நாம் நினைப்பது போல முற்றும் துறந்த நிலை அல்ல. மாறாக தியானம் என்பது ஒரு சுவாச பயிற்சியே ஆகும். நல்ல அமைதியான காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து ரிலாக்ஸாக உங்களுக்கு பிடித்தமான ஒன்றை நினைத்து கொண்டு இருந்தாலெ போதும் உன்கள் உடம்பு தானாக பிரபஞ்ச சக்தியை கிரகிக்க ஆரம்பிக்கும்.
ஆனால் நீங்கள் சிந்திக்கும் விஷயம் நேர்மறையாகவும் உங்கல் மனதிற்கு அமைதியை தரகூடியதாகவும் இருக்க
வேண்டும். இந்த நிலை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க கூடியதாகவும் உங்கள் உடம்பை நீங்கள் தள்ளி நின்று மனதளவில் ரசிக்க கூடிய நிலையிலும் இருக்க வேண்டும்.

பலர் தியானமும் இறைவழிபாடும் வெவ்வேறு என நினைக்கின்றார்கள். அது மிகவும் தவறு. இறைவழிபாடும் ஒரு வகையான தியானமே. இறைவழிபாட்டில் மனதை ஒருமுக படுத்தி இறைவனின் அருலை நாம் உள்வாங்கி கொள்கின்றோம். தியானத்தின் மூலம் மனதை ஒருமுகபடுத்தி பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி கொள்கின்றோம்.

நாத்தீகர்கள் இறைவனை பிரபஞ்ச சக்தி என கூறுகின்றார்கள்.
ஆத்தீகர்கள் இறைவனின் சக்தியை பிரபஞ்ச சக்தி என நம்புகின்றார்கள்.

சரி இதனால் என்ன பலன்:

நிறைய இருக்கின்றது குறிப்பாக உடல் ஆரோக்கியமாக இருக்கும். நன் உடலில் வரகூடிய வியாதிகளுக்கு குறிப்பாக தோல் சம்பந்தபட்ட வியாதிகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதற்கெல்லாம் மூல காரணம் நம் உடலில் இருக்க கூடிய பிரபஞ்ச சக்தியில் அளவு குறைந்து போனதே ஆகும்.இந்த சக்தியினால் ந உடலில் ரத்த ஓட்டம் சீராகின்றது.. ரத்தஓட்டம் சீராகும் போது நம் உடம்பு புத்துணர்ச்சி அடைகின்றது.முறையான இல்லர வாழ்கைக்கும் இது துணை புரிகின்றது. இதய சம்பந்தமான வியாதிகளை பெருமளவு குறைகின்றது. இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அறவே வராது.இன்னும் சொல்லபோனால் நம் உடம்பிற்கு வரகூடிய பாதி வியாதிகளுக்கு மனமே காரணம் என நான் சொல்ல வில்லை மருத்துவம் சொல்கின்றது. இந்த தியானம் மற்றும் இறைவழிபாடு மூலம் நன் உடல் வியாதிகளில் பாதியை போக்கி கொள்ளமுடியும் என்பதே அறிவியல் உண்மை.

தியானம்
மெடிடேஷன் குரு – தியானம் தமிழில்.

தியானம்

தூக்கத்ன் பொழுது நம்ம அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம்.

தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.

உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது.

தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும்.

இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது.

நம்முடைய “ஆறாவது அறிவின்” கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது.

தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும்.

நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களைத் தோடச்செய்யும்.

தியானம் என்பது ஒரு பயணம்.

தியானத்தின் போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.

மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு
அறிவாற்றலிலிருந்து நமக்குள்
பின்பு அதையும்க தாண்டி.....

“தியானம்” மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற செயல்களையும்.

“தியானம்” செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.

எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.

நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம்.

தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம்.

வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.

கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள்.

இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள்.

கண்களை மேதுவாக மூடுங்கள்.

அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள்.

உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.

மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.

கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.

கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.

மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.

ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.

நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.

மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு.
மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.

மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.

நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.

மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.

கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.

இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.

மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.

காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது.

மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.

நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.

இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.

எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.

கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.

எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.

இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.

அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.

இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.

இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.

எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.

இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது “எண்ணங்கள் அற்ற நிலை” என்றோ கூறுகிறோம்.

இதுதான் தியான நிலை.

இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.

தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.

பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும்.

இதைத் தேய்வீக வடிவம் என்றும் கூறலாம்.

ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன்

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று.

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களி லிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், “பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.”

சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் (மய்ண்ஸ்ங்ழ்ள்ங்) பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதிதான். நாம் உயிர் வாழும் பூமி. இந்த பூமியை இயக்கிக்கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம் (இர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள் ஙண்ய்க்) ஆழ்மனம் (நன்க்ஷஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள் ஙண்ய்க்) என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

“உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.” இதுவரை நாம் வாழ்ந்த நாட் களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும். இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்!

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங் களுக்கு உருவம் கொடுப்பதுதான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பபார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.

ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்.

Saturday, 5 April 2014

மனஅழுத்தம், உடல் சூடு

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால்
பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே
செய்ய வேண்டாம்..
உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை
வாங்கி
தலையில் சூடுங்கள் போதும்.
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.
மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.
மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

Friday, 4 April 2014

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” .

*
"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
வளரியல்பு -
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு பரவியது . மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் இதுவே மிளகு. இதன் கொடியை கட்டிங் செய்து இனப்பெருக்கம் செய்யலாம்.
மருத்துவப் பயன்கள்-
விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதை குறிக்கவே “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்றார்கள் நம் முன்னோர்கள்.
பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்க்காது.
மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.
மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு, கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம்.
உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.
மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும்.
ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும்
தொண்டைக் கம்மல், தொண்டை வலி, வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாள்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்..
மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும்.
பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்புறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கிராம் என இரண்டையும் போதிய அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் சகல விஷக்கடிகளும் முறிந்துவிடும்.
சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றுபோட்டு வர சரியாகும்.
மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.
மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.
மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.
மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2-3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும்.
100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.
சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.
அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.
தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.
அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.
சமையலில் மிளகாய் தூளை குறைத்து மிளகை அதிகம் சேருங்கள். மிளகு தூள் செய்து வீட்டில் எப்போதும் வைத்துகொள்ளுங்கள். கடைகளில் விற்கப்படும் மிளகு தூளை தவிருங்கள். ஆரோக்கிய வாழ்விற்கு மிளகு மிக அவசியம் என்பதை மறவாதீர்கள் !!
--------------------------------------------------------------------------------------------------------------------
மிளகுக் குடும்பத்தில் மற்றுமொரு ஜாம்பவான் திப்பிலி. ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொருள். சளி பிடித்துள்ள காலத்தில் திப்பிலியை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து தேனில் உணவிக்கு முன்னர் 3 சிட்டிகை அளவில் கலந்து சாப்பிட சளி குறையும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
காலை காபிக்குப் பதில் முசுமுசுக்கை மற்றும் கரிசாலை உலர்ந்த இலைகளை கஷாயமக்கி, பனங்கருப்பட்டி சேர்த்துப் பருகி வந்தால், காலை வேளையில் துன்புறுத்தும் இளைப்பு உடனடியாகக் குறையும்

Wednesday, 2 April 2014

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்!

1.அவசர உதவி அனைத்திற்கும்————–911
2.வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
3.மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
4.மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
5.போலீஸ் SMS :- ———————————-9500099100
6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
7.போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
8.போலீஸ் : —————————————–100
9.தீயணைப்புத்துறை :—————————-101
10.போக்குவரத்துவிதிமீறல——————–103
11.விபத்து :——————————————–100, 103
12.ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
13.பெண்களுக்கானஅவசர உதவி : ———–1091
14.குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
15.அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
16.முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
18.கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
19.ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
20.கண் வங்கி அவசர உதவி : ——————-1919
21.விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666
22.நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

Tuesday, 1 April 2014

நினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள்..

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
மூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க எளிய வழி!

மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன் மிக மிக அவசியம். காரணம் மூளை தனது எரிபொருளாக குளுகோஸையே பயன்படுத்திக் கொள்கிறது. இவை நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூளைக்கும் பிராண சக்திக்கும் இடையிலான தொடர்பு குறித்து நமது தந்திர யோகிகள் அறிந்திருந்தனர். மூளையின் இயக்கத்திற்கு பிராண வாயு (ஆக்சிஜன் ) மட்டுமின்றி, பிராண சக்தி எனப்படும் பிராணனும் தேவை என தந்திர யோக நூல்கள் கூறுகின்றன.

இந்த பிராண சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்து, மூளையின் செயல்திறனைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் எளிய தந்திர யோக முறையே பிராண முத்திரையாகும்.

செய்முறை: சிறுவிரல், மோதிர விரல் ஆகியவற்றின் நுனிப் பகுதியால் பெருவிரலின் நுனிப்பாகத்தைத் தொடவும், அதிக அழுத்தம் வேண்டாம் சற்றே தொட்டுக் கொண்டிருந்தால் போதும், பிற இரு விரல்களும் (சுட்டுவிரல், நடுவிரல்) வளைவின்றி நேராக இருக்கட்டும்.

அமரும் முறை: ஆசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம், மற்றவர்கள் கால்களை மடக்கி அமர்ந்து செய்யவும், மாணவர்கள் படிக்கத் துவங்கும்முன் நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த முத்திரையைச் செய்யலாம், தலை, கழுத்து, முதுகு ஆகியவை வளைவின்றி நேராக இருக்க வேண்டும். இரு கைகளிலும், ஒரே நேரத்தில் செய்யவும், சுவாசம் இயல்பான நடையில் இருக்கட்டும். சீராகவும் ஆழமாகவும் இருப்பது அவசியம், மூச்சை அடக்குதல் கூடாது.

குறைந்த பட்சம் 8 நிமிடங்கள், அதிக பட்சமாக 48 நிமிடங்கள் வரையில் செய்யலாம். சராசரியாக பள்ளி மாணவர்கள் காலையில் 16 நிமிடங்கள், மாலையில் 16 நிமிடங்கள் செய்யப் பழகிக்கொள்வது நல்லது.

பலன்கள்: மூளையின் செயல்களுக்கு பிராண சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால், மூளை சுறுசுறுப்பாகிறது. மூளையின் செல்களிலுள்ள சோர்வு மறைந்து, புத்துணர்ச்சியுடன் மூளை செயல்படத் துவங்கும். உடலிலுள்ள அனைத்து செயல்களுக்குமே பிராண சக்தி அதிக அளவில் பாய்வதால் உடலில் உள்ள அசதி, சோர்வு, சோம்பேறித்தனம் ஆகியவை மறைந்து, உடலிலும் ஒரு புத்துணர்வு உருவாகும். உடல் , மூளை இரண்டின் செயல்திறணும் பல மடங்கு அதிகரிக்கும். உடலில் பிராண சக்தி அதிக அளவில் பாயும்போது, நாடிகளில் உள்ள சக்தித் தடைகள் அதிகரிக்கும். இவை தவிர பிராண வாயுவுக்கு வேறு ஒரு மிக முக்கியமான பணியும் உண்டு.

ஆக்சிஜன் அதிகம் கிடைப்பதால் மூளையின் செயல்கள் சுறுசுறுப்படைந்தாலும் இடது மூளையின் செயல்பாடுகளே அதிகரிக்கும். பிராண சக்தி அதிக அளவில் செல்லும்போதுதான் வலது மூளையின் பணிகளான, பேச்சுத்திறன், எழுத்துத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் அதிகரிக்கும்.நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தியும் பிராண முத்திரைக்கு உண்டு. பிராண முத்திரையைத் தொடர்ந்து செய்து நினைவாற்றலைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்யலாம்.

1. கவனமான பார்வை

2. ஆர்வம், அக்கறை

3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம்.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள், பிறகு 2, 4, 6, என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள், பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98, 96 என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5, 6, 7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள்.

இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏ யை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரிய வரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதேபோன்று இன்னொரு பயிற்சி உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள் அதில் மறுநாள் 9 மணிக்கு யாரையாவது சந்திப்பதாக எழுதிப் போடுங்கள். பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதேபோன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு விடயத்தை எழுதிப் போடுங்கள். அதேபோன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்துவிட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

இந்த 6 விடயங்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளலாம். புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிகெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அப்பியாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத் திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக்கொண்டால் வாழ்க்கை நின்றுவிடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும். ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர். அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே புத்திசாலி மற்றும் மிகுந்த அறிவுள்ளவர்கள்.
உதாரணமாக ஒருவர் படிப்பில் கெட்டிக்காரராக, புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் அவர் விளையாட்டில் அவ்வாறாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிவில் பல வகைகள் உள்ளன. அத்தகைய அறிவை அனைவரும் பெற வேண்டுமென்றால், அறிவை வளர்க்க ஒரு சில வழிகள் இருக்கிறது.

அறிவை வளர்க்க சில டிப்ஸ்....

1. நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். இவற்றில் தூக்கம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டும் ஒன்று அல்ல. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்குகிறோம். ஆனால் அப்போது உடலானது ஓய்வு பெறுகிறது. ஆனால் அவ்வாறு தூங்கி எழுந்து புத்துணர்ச்சி அடையாமல் இருந்தால், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அப்போது அறிவானது குறைவாகத் தான் இருக்கும். ஆகவே நல்ல தூக்கத்தின் மூலம் அறிவானது பெருகும்.

2. நிறைய பேர் வார இறுதியில் தூங்கி எழுந்திருக்கும் போது நீண்ட நேரம் கழித்து எழுந்திருப்பர். ஆனால் எழுந்ததும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பர். ஆனால் அப்படி எழுந்து உடற்பயிற்சி செய்ய நினைக்கும் நேரம் ஷூ ஆனது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தேடி, அதையே கண்டு பிடிக்க போய் ஒரு நாளில் அரை நாள் போய்விடும். இந்த நேரத்தில் அவர்களது மூளையானது அந்த ஒரு ஷூவில் மட்டும் தான் இருக்கிறதே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை.

மேலும் சோம்பேறித்தனம் தான் அறிவை மழுங்க வைத்து நேரத்தை கழிக்கிறது. எப்படியெனில் நீண்ட நேரம் தூங்குவதால் சோம்பேறித்தனம் தான் அதிகரிக்கும். ஆகவே அத்தகைய நீண்ட நேர தூக்கமானது அறிவை அப்போது மழுங்க வைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு மழுங்காமல் ஸ்டாமினா அதிகரிக்க தினமும் எழுந்து சுறுசுறுப்பாக 'ஜாக்கிங்' செய்ய வேண்டும். இதனால் அறிவானது பெருகும்.

3. தொலைக்காட்சியில் தேவையில்லாத நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை மழுங்க வைக்கின்றனர். மேலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு அடிமையே ஆகிவிடுகின்றனர். மூளையானது ஒரு கத்தி போன்றது. அதை பயன்படுத்தாவிட்டால் கூர்மையை இழந்துவிடும். ஆகவே அறிவுக்கு வேலை கொடுக்கும் நிகழ்ச்சிகளை வேண்டுமென்றால் காணலாமே தவிர, அறிவை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டாம்.

4. இன்றைய காலத்தில் நிறைய பேர், எடை குறைய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சாப்பிடாமலே இருக்கின்றனர். ஆகவே இத்தகையவற்றை நினைவில் கொள்ளாமல், நன்கு உண்டால் தான் மூளையானது கத்திப் போல் நன்கு வேலை செய்யும். மேலும் நட்ஸ், தானியங்கள், முட்டை மற்றம் கடல் உணவுகள் போன்றவை மூளையை வளர்க்கும் உணவுகள் ஆகும். மேலும் இவை அனைத்தும் உடலுக்கு ஏற்ற, உடல் எடையை அதிகரிக்காத உணவுகளும் கூட.

5. நன்கு விளையாட வேண்டும். மூளையை நன்கு சுறுசுறுப்பாக, கூர்மையாக வைத்துக் கொள்ள யோசிக்கும் வகையில் இருக்கும் விளையாட்டுகளை விளையாட வேண்டும். உதாரணமாக செஸ், வார்த்தை விளையாட்டு, மெமரி கேம்ஸ் போன்றவற்றை விளையாடுவதன் மூலமும் அறிவை வளர்க்கலாம்.
இவ்வாறெல்லாம் பின்பற்றுங்கள் மூளையானது சுறுசுறுப்போடு இருப்பதோடு, அறிவும் கூர்மையடையும்.

நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும் நுட்பங்கள்:
1. உடற்பயிற்சி:
உடற்பயிற்சி என்பது உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும், நினைவாற்றல் பெருக்கத்திற்கும் மிக மிக அவசியமாகும். எனவே தினமும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்களை யாவது உடற்பயிற்சிக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும்.
ஒன்றை நாம் தெளிவாக அறிந்து கொள்ளாதபோது நம்மால் அதனை நினைவுக்கு கொண்டு வருதல் இயலாது. மிகச் சிறிய விஷயம் ஒன்றை பதிவு செய்ய நம்முடைய மூளை குறைந்தது எட்டு நொடிகளை எடுத்துக் கொள்கிறது. எனவே, வலிந்து நினைவில் செய்திகளை பதிக்கும்போது அமைதியான இடையூறில்லாத சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
2. தையல்காரர் அணுகுமுறை:
மேலோட்டமாய் தகவலைக் கேட்டுக் கொள்வது, போகின்ற போக்கில் பார்த்து வைப்பது என நுனிப்புல் மேய்வது போல் இல்லாமல் ஒரு தையல்காரர் எவ்வாறு அளவுகளை சரியாகக் குறித்துக் கொள்கிறாரோ அவ்வாறு தகவல்களைப் பதிவு செய்து கொள்வது என்றைக்குமே மறந்துபோகாது.
3. பல்வேறு புலன்களை பயன்படுத்துதல்:
கண்டிப்பாக நினைவில் வைக்கவேண்டிய விஷயங்களை வாய்விட்டு சொல்லிப்பார்த்தல் நல்லது. படித்தறியும்போதுகூட பார்வையிலேயே படிப்பதைக் காட்டிலும் வாய்விட்டு (முடிந்தால் சத்தமாக) படித்தலும், சற்று முயற்சி செய்து ரிதம் போல் வரிசைப்படுத்திக்கொள்ளுதலும் சிறந்தது. கேட்பதன் மூலமாக அறிந்து கொள்ளும்போது தொடர்புடைய நிறம், சொற்கள், வாசம், தன்மையோடு பதிவுசெய்து கொள்வதும் நல்ல பலனைத் தரும்.
4. முன்பே அறிந்தவற்றோடு தொடர்புபடுத்தி வைத்தல்:
புதிய தகவல்கள் முன்பே அறிந்தவற்றோடு தொடர்புடையது எனும்போது அவற்றை நினைவுபடுத்திப் பார்த்து இணைத்து பதிவு செய்யலாம்.
5. படம் வரைந்து வைத்துக்கொள்ளுதல்:
எழுதிவைக்கும் தகவல்களோடு அதற்குரிய படங்களையும் (கோட்டுப் படம் போல்) சின்னச் சின்னதாய் பக்கத்திலேயே வரைந்துவைத்து எழுதிக் கொண்டால் நினைவுபடுத்திப் பார்க்கும் போது தன் கருத்துக்களை தன் நினைவுக்கும், பிறருக்கு தகவலாகவும் மனிதன் பதிவு செய்துள்ளான். இது இன்றைக்கும் சிறந்த முறையாகும்.

ஞாபக சக்தியை அதிகரிக்க பிராமி, சங்குபுஷ்பி, வல்லாரைக் கீரை போன்ற ஆயுர்வேத மருந்துகள் உதவுகிறது.மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

பீர்க்கங்காய் வேரை எடுத்து நன்கு சுத்தம் செய்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைக்கு பலம் கூடும்.

தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்து கொடுத்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

நினைவாற்றலை அதிகரிக்க பாதம் சாப்பிடுங்கள்!!

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அதுபோல் பாதாம் நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி கொண்டது. குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் சாப்பிட கொடுத்து வந்தால் அவர்களது நினைவாற்றல் அதிகரிக்கும். இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப்பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும். உங்களுக்காக சில குறிப்புகள்:

1. ஞாபகசக்தியை அதிகரிக்கம் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீட்சை,திராட்சை, மாதுளை,ஆரஞ்சு முதலியன.

2. சமையலில் சீரகம்,மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

3. பள்ளிக் குழந்தைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரவில் 12 பாதாம் பருப்புகளை ஊறப்போட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் நரம்புகளும் பலமாகின்றன. அரைக்கும் முன் பாதாமின் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாமில் 490 கிராம் பாஸ்பரஸ், தாதுஉப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் இதில் உள்ளது.

4. கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பீட்ரூட், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா ஆகியவற்றிலும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இதை தவிர பால், தயிர் முதலியவற்றையும் உணவில் சோ்க்க வேண்டும்.

5.பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும்.

6.அறிவை அதிகரிக்கும் வெண்டைக்காய்:
மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும். இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.
வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா.
கொழுப்பை கரைக்கும்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.
கொழ கொழ காய்
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
வாய்நாற்றம் அகலும்
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.
வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.
இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.

மூளையைக்காக்கும் மற்றும் ஷார்ப்பாக்கும் ஆறு உணவுகள்…

1) வால் நட்ஸ்:
இயற்கை அன்னைக்கே தெரிந்ததாலோ என்னவோ தெரியவில்லை… இந்த வால் நட்ஸின் தோற்றமே சின்ன மூளையைப்போலத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.
2009ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த வால் நட்ஸ் உணவில் சேர்க்கப்படும்போது அது மூளையின் வயதாகும் தன்மையை 2% வரை சீர்படுத்துவதாகவும், மூளையின் செயல்திறனை அதிகரிப்பதாகவும், மூளையின் தகவல் கையாளும் திறனை அதிகரிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
2010ல் நடந்த ஒரு ஆய்வில் வால் நட்ஸ் தொடர்ந்து உண்ணப்படும்போது அல்சைமர் நோய் இருக்கும் மூளையில்கூட செயல்பாடுகள் முன்னேற்றம் காண்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

(அல்சைமர் என்பது வயதாகும்போது மூளையில் ஏற்படும் ஒருவிதமான நோய். இது மெல்ல மெல்ல வாய் குளறலில் ஆரம்பித்து முற்றிய நிலையில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுமளவில் குறைந்தும், நினைவிழப்பு ஏற்படுதல் மற்றும் மூளையின் கட்டளையிடும் திறன், செயல்பாடு ஆகியன முழுவதுமாய் குறைந்தும் இறுதியாய் இறப்பு வரை இழுத்துச்செல்லக்கூடியதுமாகும்…)

2) கேரட்:
நீண்டகாலமாகவே கேரட் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது அது கண்ணுக்கு நல்லது என்பதுதான்… அது இப்போது மூளைக்கும் மிக நல்லது என்பது கூடுதல் செய்தி.
கேரட்டில் நிறைந்திருக்கும் லுயுட்டோலின்(Luteolin) காம்பவுன்டானது வயது சம்பந்தப்பட்ட நினைவாற்றல் குறைபாடுகளை நீக்குவதிலும், மூளையின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தன்மையை அதிகரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆலிவ் ஆயில் மற்றும் பெப்பர் ஆகியவற்றிலும் இந்த லுயுட்டோலின் நிறைந்திருப்பது கூடுதல் தகவல்.

3) பெர்ரீஸ்:
விட்டமின்கள் நிறைந்திருக்கும் பெர்ரீஸ் பழங்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படும்போது நினைவாற்றல் மிக அதிகமாக அதிகரிக்கும்.
2010ம் ஆண்டில் நினைவாற்றல் குறைபாடுள்ள ஒத்த வயதினரை இரு பிரிவாகப்பிரித்து ஒரு பிரிவுக்கு மட்டும் 12 வாரங்கள் பெர்ரி பழ ஜீஸ் கொடுத்தும் ஒரு பிரிவுக்கு பெர்ரி சேர்க்காமலும் சோதிக்கப்பட்ட ஆய்வின் முடிவில், பெர்ரி உட்கொண்ட பிரிவினருக்கு நினைவாற்றல் மிக அற்புதமான அளவில் முன்னேறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இது டிப்ரஷனுக்கான அறிகுறிகளையும் வெகுவாக குறைத்திருக்கிறது.
2009ம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவில் ஆண்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கும் புளு பெர்ரி மற்றும் ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் வயதாகும் தோற்றத்துடன் சம்பந்தப்பட்ட செல்களில் ஏற்படும் ஒருவித ஸ்ட்ரெஸ்சை குறைப்பதிலும், மூளையின் சிக்னல் திறனை அதிகரிப்பதிலும் அரும்பங்கு ஆற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

4) மீன்:

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்திருக்கும் பலவகை மீன்கள் உணவில் சேர்க்கப்படும்போது மூளையின் செயல்திறன் குறைபாடுகள் குறைவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. (மீன் எண்ணெய் மாத்திரை போன்ற சப்ளிமெண்ட் ஐயிட்டங்கள் உபயோகமற்றவை என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
2005ம் ஆண்டு 65 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் வாரத்துக்கு இரண்டு முறை மீனை உணவில் சேர்க்கும் பழக்கமுடையவர்களுக்கு மூளை செயல்திறன் குறைபாடு 13% வரை குறைந்த்தும், வாரத்துக்கு ஒரு முறை மீனை உணவில் சேர்ப்பவர்களுக்கு 10%வரை குறைந்ததும் கண்டறியப்பட்டிருக்கிறது.
விட்டமின் B-12 நிறைந்திருக்கும் சில மீன்களை உண்ணும்போது அது அல்சைமர் நோய்க்கு எதிராக போராடுவதாகவும் சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

5) காஃபி மற்றும் டீ:

காப்பியும் டீயும் வெறுமனே நாம் காலையில் குடிக்கும் பானங்கள் மட்டும் இல்லை. அவை அல்சைமர் நோய் தாக்காமல் தடுக்கவும், செயல்திறன் குறைபாட்டை குறைக்கவும் பெருமளவு உதவுவதாக பலவித ஆய்வு முடிகளும் அறிவித்திருக்கின்றன.
காப்பி குடிக்கும் பழக்கம் அல்சைமர் நோயை வராமல் தடுக்கவும், வரும் வாய்ப்பை குறைக்கவும் உதவுதாக சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.
நினைவு மற்றும் தகவல்கள் சோதனை ஆராய்ச்சிகளில் டீ குடிப்பவர்கள் டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களைவிட அற்புதமாக செயல்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

6) ஸ்பினாச் எனப்படும் பசலைக்கீரை:

சின்ன வயதிலிருந்து நமது அம்மாக்கள் கீரை சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்று அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளச்சொல்லி வற்புறுத்துவார்கள். இந்தக்கீரையில் விட்டமின் C மற்றும் E நிறைந்திருக்கிறது.
விட்டமின் Eயை உடம்பில் வழங்கி செய்யப்பட்ட ஆராய்ச்சியில் மூளை மற்றும் நெர்வ் திசுக்கள் 500 முதல் 900% வரை வளர்ச்சி கண்டிருப்பதும், மூளையிலிருந்து உடம்பு முழுக்க தகவல்களை அனுப்புவதை கட்டுப்படுத்தும் டோபோமைன் என்ற திரவம் சுரப்பது அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

முதுமையிலும் நினைவாற்றல் அதிகரிக்க ..???
1) உணவுப் பழக்கங்கள்:

உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத் தவிர்ப்பதும் நல்லது.

2) உடற்பயிற்சி:

தினமும் சில மைல்கள் நடப்பதும், மிதமான உடற்பயிற்சி செய்வதும் மூளையின் ஆற்றல் குறையாமலிருக்க மிகவும் உதவுகின்றன என்பதை பல ஆராய்ச்சிகள் ஒருமித்துக் கூறுகின்றன. மூச்சுப்பயிற்சிகளும் பெருமளவு உதவுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

3) புதிய முயற்சிகள்:

எப்போதும் வழக்கமான செயல்களையே செய்து கொண்டிராமல் புதிய புதிய முயற்சிகளிலும், செயல்களிலும் ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும் இளமையாகவும் திறனுள்ளதாகவும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

4) ஓய்வு:

சுறுசுறுப்பாக இருப்பது போலவே தேவையான அளவு ஓய்வும், உறக்கமும் மூளையின் திறன் குறையாமல் இருக்க மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

5) மூளைக்கு வேலை:

மூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள், புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள முற்படுதல் ஆகியவை மூளைக்கு முறையாக வேலை தந்து அதன் திறனைத் தக்க வைத்துக் கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

6) படித்தல்:

புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல பொழுது போக்கு மட்டுமல்ல அது மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே புத்தகங்கள் படிப்பதும் உதவும்.

7) நல்ல பழக்க வழக்கங்கள்:

புகைபிடித்தல் மற்றும் அதிகமாய் மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள் நாளடைவில் மூளைத் திறனை மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தீய பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக முக்கியம்.

8) மற்றவை:

அடிக்கடி பயணிப்பது, பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வது, இசையைக் கேட்பது, அதிகமாய் கவலைப்படாமல், பதட்டப்படாமல் இருப்பது, தியானம் செய்வது போன்றவையும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது என்கின்றன விஞ்ஞான ஆராய்ச்சிகள்.

மேலும் வயதாக வயதாக மனிதன் சில பல செயல்களில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதும், வயதாகி விட்டதால் சில செயல்பாடுகள் முன்பு போல் இருக்க முடியாது என்று நம்ப ஆரம்பிப்பதும் மூளையின் ஆற்றல் குறைய முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே மேற்சொன்ன ஆலோசனைகளைக் கடைபிடித்து, மனதளவில் முதுமையடைந்து விடாமல் இருந்தால் மூளை என்றும் முதுமை அடைந்து விடுவதில்லை, அதன் ஆற்றல் குறைந்து விடுவதில்லை என்பதை நினைவில் இருத்துவோமாக!